அடுத்த மாதம் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடர்

 
tn assembly

தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் அடுத்த மாதம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

தமிழக சட்டசபை கூட்டம் மானிய கோரிக்கை மீதான விவாதங்களுடன் கடந்த மே மாதம் நடந்து முடிந்தது. ஒரு கூட்டத்தொடர் முடிந்ததும் அடுத்த 6 மாதங்களுக்குள் மீண்டும் சட்டசபை கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்பது பேரவை விதியாகும். அதன்படி வருகின்ற அக்டோபர் மாதம் இரண்டாவது வாரத்தில், தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக 5 நாள்கள் கூட்டத் தொடர் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில், அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஜெயலலிதா மரண வழக்கை விசாரித்த நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையும், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கை விசாரித்த நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையும் தாக்கல் செய்யப்படவுள்ளது. அறிக்கை வெளியிடப்படும் போது ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளதா? இல்லையா? என்பது தெரியவரும். 

இதேபோல் ஆன்லைன் ரம்மி தடைக்கான அவசரச் சட்டமும் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அ.தி.மு.க. சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரான ஓ.பன்னீர் செல்வத்தை கட்சியை விட்டு நீக்கி எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே சபாநாயகரிடம் கடிதம் கொடுத்திருந்தார். அந்த கடிதத்தின் மீது சபாநாயகர் என்ன முடிவு எடுப்பார்? ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதே இருக்கையில் இடம் ஒதுக்கப்படுமா? அல்லது வேறு இடம் ஒதுக்கப்படுமா? என்பது குறித்து விரைவில் தெரியவரும். சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கும் நாள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை பேரவைத் தலைவர் அப்பாவு விரைவில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.