அண்ணா பல்கலை., 42வது பட்டமளிப்பு விழா - பிரதமர் மோடி பங்கேற்பு!!

 
anna

அண்ணா பல்கலைக்கழகத்தின் 42வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பங்கேற்கிறார்.

Anna univ
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 500க்கும் மேற்பட்ட கல்லூரிகள் இயங்கி வருகின்றன.  இதில் சுமார் 7.30 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர்.  பட்டப்படிப்பு முடித்தவர்கள் மேற்படிப்பு செல்வதற்கும் வேலை வாய்ப்பு பெறவும் பட்ட சான்றிதழ் அவசியம் . கொரோனா காரணமாக அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த கல்வியாண்டு படிப்பு முடித்தவர்களுக்கு இன்னும் பட்டம் அளிக்கப்படாமல் உள்ள நிலையில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் தவித்து வருகின்றனர்.

 ‘மாமல்லபுர மர சிற்பம்’ - பிரதமர் மோடிக்கு நினைவுப் பரிசு வழங்கிய முதல்வர்..

இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் 42வது பட்டமளிப்பு விழா சென்னை கிண்டியில் உள்ள அதன் வளாகத்தில் இன்று நடைபெறுகிறது . இதில் சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். பிரதமர் மோடியை தவிர ஆளுநர் ஆர்.என். ரவி , முதல்வர் மு.க.ஸ்டாலின்,  உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்டரும் கலந்து கொள்கின்றனர்.