ஓபிஎஸ், ஈபிஎஸ்- இடம் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தாமல் திரும்பிய பிரதமர் மோடி

 
ops eps modi

பிரதமர் மோடி காந்திகிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மீண்டும் கார் மூலம் மதுரை வந்தடைந்தார்.

Modi Presses The Right Buttons In Tamil Nadu, Woos Farmers, Fishermen,  Dalits


பிரதமர் மோடியுடன் தமிழக ஆளுநர் ஆர். என். ரவியும் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். மதுரை விமான நிலையத்தில் பிரதமர் மோடியை  தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், வருவாய்துறை அமைச்சர் K.K.S.S.R. ராமசந்திரன், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் வழியனுப்பி வைத்தனர்.

மதுரை விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வழியனுப்ப அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர் செல்வம் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், வைத்தியலிங்கம் மனோஜ் பாண்டியன் முன்னாள் எம்பி கோபாலகிருஷ்ணன் ஆகியோர் வழியனுப்ப மதுரை விமான நிலையத்திற்கு வந்தனர். ஆனால் 
மதுரை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பிடமோ அல்லது ஓபிஎஸ் தரப்பிடமோ எந்த பேச்சுவார்த்தையும் பிரதமர் மோடி நடத்தவில்லை.