நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மிதமான மழை

 
ர்

நாகப்பட்டினம்,  திருவாரூர் மாவட்டத்தில் பல  பகுதிகளில்  மிதமான மழை பெய்து வருகிறது.

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் இலங்கு கடலோரப் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகின்றது.  இதனால் திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது.

ர்ர்

 சென்னை, செங்கல்பட்டு, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கடலூர் ,விழுப்புரம், புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய 13 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டு இருக்கிறது.  இந்த மாவட்டங்களில் பல இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

 இந்த நிலையில் நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.   நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேதாரண்யம் ,கோடியக்கரை, கரியாப்பட்டினம் ,வாய் மேடு, தாணிக்கோட்டகம், ஆதனூர் தேத்தாகுடி ஆகிய பகுதிகளிலும் திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலும் மிதமான மழை பெய்து வருகிறது.