ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் மாதிரி வாக்குப்பதிவு

 
Erode

இடைத்தேர்தல் நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் மாதிரி மின்னணு வாக்குப்பதிவு நடைபெற்றது. 

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த  திருமகன் ஈவேரா மாரடைப்பால் கடந்த 04ம் தேதி காலமானார்.  இதனையடுத்து ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு வருகிற பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. வாக்கு எண்ணிக்கை வருகிற மார்ச் 02ம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  வேட்புமனு தாக்கல் ஜனவரி 31ஆம் தேதி தொடங்குகிறது.  இதையொட்டி அனைத்து கட்சிகளும் தேர்தலை சந்திக்க சுறுசுறுப்பாகி வருகிறது. இதனை முன்னிட்டு ஈரோட்டில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் ஈரோடு மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான கிருஷ்ணன் உன்னி நேற்று ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.  

இந்நிலையில், இடைத்தேர்தல் நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் மாதிரி மின்னணு வாக்குப்பதிவு டைபெற்றது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. பொதுவான பெயர், பொதுவான சின்னங்களை கொண்டு நடைபெறும் மாதிரி வாக்குப்பதிவை ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர் கிருஷ்ணனுண்ணி நேரில் ஆய்வு செய்தார். இதில் அனைத்து கட்சியினரும் பங்கேற்றுள்ளனர்.