”நான் இதை எதிர்பார்க்கவே இல்லை” காலில் விழுந்த ஸ்டாலின்! கட்டி பிடித்து தழுதழுத்த தாய்மாமா

 
mkstalin

திருவாரூர் அருகே கோவில் திருமாளம் பகுதியில் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் மனைவி தயாளு அம்மாளின் சகோதரரை முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

கடலூர், மயிலாடுதுறை, சீர்காழி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பெய்த கனமழையினால் ஏற்பட்ட பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்த தமிழக முதல்வர், திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகாவிற்கு உட்பட்ட கோவில்திருமாளம் பகுதியில் முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் மனைவி தயாளு அம்மாளின் சகோதரர் தெட்சிணாமூர்த்தியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். சால்வை அறிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து தேநீர் அருந்தினார். பின்னர் அவர்கள் நலம் விசாரித்து அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். 

இந்த நிகழ்ச்சியில் திருவாரூர் திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் அமைச்சர்கள் கே என் நேரு, எவ.வேலு, எம்ஆர்கே பன்னீர்செல்வம், செந்தில்பாலாஜி, மெய்யநாதன்,  ரகுபதி, தமிழக டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏகேஎஸ் விஜயன், தாட்கோ தலைவர்  மதிவாணன் ஒன்றிய செயலாளர் மனோகரன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.