நடராஜர் குறித்து அவதூறாக பேசிய மைனர் விஜய்! யூ 2 புருட்டஸ் யூடியூப் சேனலுக்கு எதிர்ப்பு

 
ச

யூ 2 புருட்டஸ் என்ற யூடியூப் சேனலில் நடராஜர் சுவாமி பற்றி அவதூறாக பேசிய மைனர் விஜய் என்பவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய கோரி இந்து முன்னணியினர் சிவன் வேடமணிந்து திருவூடல் மேளம் அடித்துகொண்டு நூதன முறையில் ஊர்வலமாக வந்து வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 

வேலூரில் இந்து முன்னணியின் சார்பில் கோட்டத்தலைவர் மகேஷ் தலைமையில் இந்து முன்னணியினர் ஆட்சியர் அலுவலகம் எதிரிலிருந்து சிவன் வேடமணிந்து திருவூடல் மேளங்கள் இசைக்க ஊர்வலமாக வந்து சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு  வந்து மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியனிடம் மனு அளித்தனர். உடன் மாவட்ட பொருளாளர் பாஸ்கர் உள்ளிட்ட இந்து முன்னணி நிர்வாகிகள் இருந்தனர்.

மனுவில்  யூ 2 புரூட்டஸ் என்ற யூடியூப் சேனலில் மைனர் விஜய் என்பவரை இந்து மதத்திற்கு எதிராகவும் நடராஜர் சாமியை அவதூறாக பேசியதை கண்டித்தும் சட்டபடி அவர் மீது வழக்குபதிவு செய்து தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய கோரியும் அவதூறை பரப்பும் யூ2 புரூட்டஸ் யூடியூப் சேனலை தடைவிதிக்க கோரியும் மனு அளித்தனர்.