பாவேந்தர் பாரதிதாசனின் திருவுருவ சிலைக்கு தமிழக அரசின் சார்பில் மரியாதை

 
Bharathi dasan

 

பாவேந்தர் பாரதிதாசன் 132ஆவது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழக அரசின் சார்பில் அரசு மரியாதை செய்யபட்டது.
 
‘எங்கள் வாழ்வும் எங்கள் வளமும், மங்காத தமிழென்று சங்கே முழங்கு” “தமிழுக்கும் அமுதென்று பேர், அந்த தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்” என்ற புகழ்பெற்ற பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர் பாவேந்தர் பாரதிதாசன். தன் அசாதியாமான படைப்பாற்றல் மூலம் தமிழுக்குப் பல வழிகளில் தொண்டாற்றிய பாரதிதாசன் 1964-ஆம் ஆண்டு ஏப்ரல் 21-ஆம் தேதி இயற்கை எய்தினார். பாவேந்தர் பாரதிதாசன் மறைவிற்குப் பிறகு அவர் புகழ் போற்றும் விதத்தில் ‘சாகித்ய அகாடமி விருது’ வழங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசின் சார்பில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த வருடமும் திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்றதை அடுத்து பாரதிதாசன் பிறந்த தினமான இன்று அரசு சார்பில் முறையான மரியாதை செலுத்தப்பட்டது.

Bharathi dasan

பாவேந்தர் பாரதிதாசன் 132ஆவது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழக அரசின் சார்பில் அரசு மரியாதை செய்யபட்டது. இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்ரமணியன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் மற்றும் துணை மேயர் மகேஷ் குமார் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.