மின்சாரக் கட்டண உயர்வுக்கு அதிமுகவினரே காரணம்- அமைச்சர் தா.மோ.அன்பரசன்

 
tha mo anbarasan

வருகின்ற தேர்தல் நாம் அனைவரும் ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் கட்சி நிர்வாகளுக்கு அறிவுறுத்தினார். 

டேய்.. நீயே அமாவாசை தானே” - அமைச்சரை ஒருமையில் பேசிய பா.ஜ.க நிர்வாகி..  வீடியோவால் பரபரப்பு! | BJP Karate Thiagarajan retaliates Minister Tha Mo  Anbarasan - Tamil Oneindia

செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப் பெருமாள் கோயில் ஊராட்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் காட்டாங்கொளத்தூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் பொங்கல் விழா நடைபெற்றன. இதில் சிறப்பு விருந்தினர்களாக குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், எம்.பி.செல்வம்,  சட்டமன்ற உறுப்பினர் வரலஷ்மி மதுசூதனன் ஆகியோர் கலந்துக்கொண்டு பேசினர். கரும்பு, வாழை தோரணங்களுடன், மண்பானையில் பொங்கலிட்டனர். பின்னர் கட்சி நிர்வாகிகளுக்கு பொங்கல் பரிசு பொருட்களை வழங்கினர். 

இந்நிகழ்வில் பேசிய அமைச்சர் அன்பரசன், “தமிழகத்தில் மின்சாரக் கட்டணம் உயர்வுக்கு அதிமுக தான் காரணம், இது பல பேருக்கு தெரியாது. ஆனால் அதிமுகவினர் எல்லா இடங்களிலும் மின்சார கட்டண உயர்விற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையெல்லாம் பொதுமக்கள் இடத்தில் எடுத்து சொல்ல வேண்டும். வருகின்ற தேர்தல் மிகவும் சிரமமாக தேர்தல், நமக்கு மிக கஷ்டத்தை கொடுப்பார்கள், நாம் அனைவரும் ஒற்றுமையாக பணியாற்றினால் நம்மை எதிர்ப்பவர்களால் எதுவும் முடியாது. வருகின்ற தேர்தலில் ஒற்றுமையாக பணியாற்றி மாபெரும் வெற்றி பெற்று தலைவர்களுக்கு புகழ்மாலை செலுத்துவோம்” என பேசினார்.