‘மெயின்ரோடு’ என்று எல்லோராலும் புகழப்படுகிற ஜெயக்குமார்.... செந்தில் பாலாஜி விளாசல்

 
senthil balaji

தனக்குதானே ‘கண்ட்ரோல் இல்லாதவர்கள்’ சொல்வதையெல்லாம் மக்கள் நம்புவதில்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

AIADMK leader Jayakumar arrested from his house in Chennai | The News Minute

கரூர் மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி இணை செயலாளர் சிவராஜ், கடத்தலுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். புகார் தொடர்பாக திமுக பிரமுகர்கள் கேசவன் உள்ளிட்ட 3 பேர் மீது ஆள் கடத்தல் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிமுகவினர் மீது தொடர்ந்து பொய் வழக்குகள் போடப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியிருந்தார். அதுமிட்டமில்லாமல், கரூரில் கண்ட்ரோல் இல்லை, கரூர் மாவட்டம் வாலை சுருட்டிக்கொண்டு இருக்க வேண்டும் என ஜெயக்குமார் சாடியிருந்தார். கரூர் மாவட்டத்தில் அத்துமீறல் 100 சதவீதம் நடைபெறுகிறது, ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் திமுகவினர் ஈடுபட்டுவருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.இந்நிலையில் அமைச்சர் செந்தில்பாலாஜி தனது டிவிட்டர் பக்கத்தில், “கரூர் மாவட்டத்தில் அனைத்துத் தேர்தல்களிலும் மக்களால் புறக்கணிக்கப்படும் அதிமுக, எப்படியாவது செய்திகளில் இடம் பெற்றுவிட அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.‘கரூரில் கண்ட்ரோல் இல்லை’ என ‘மெயின்ரோடு’ என்று எல்லோராலும் புகழப்படுகிற ஜெயக்குமார் பேசியிருக்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நல்லாட்சியில் தமிழ்நாடு முழுக்க சட்டம், ஒழுங்கு மிகச் சிறப்பாகக் கையாளப்பட்டு அமைதிப்பூங்காவாக திகழ்கிறது. தனக்குதானே ‘கண்ட்ரோல் இல்லாதவர்கள்’ சொல்வதையெல்லாம் மக்கள் நம்புவதில்லை” எனக் குறிப்பிட்டுளார்.