தமிழ்நாட்டில் 84 டாஸ்மாக் கடைகள் மூடல்- செந்தில் பாலாஜி

 
senthil balaji

திமுக ஆட்சி பொறுப்பேற்றதற்கு பின்பாக பள்ளிகள், கோயில்களுக்கு அருகில் இருந்த 84 மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

tasmac

அரசு மாணவியர் விடுதி, ஊராட்சி ஒன்றிய அலுவலகம் , தீயணைப்புத்துறை ஆகியவற்றிற்கு அருகில் மற்றும் நூற்றுக்கணக்கான பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் வந்து செல்லும் முக்கிய வழிகளில் டாஸ்மாக் மதுப்பான கடைகள் அமைக்ககூட்டது என பொதுமக்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். 

இந்நிலையில் இன்று நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் அமைச்சர்கள் தங்கள் துறைகளில் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்தனர். அதில், மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சர் செந்தில் பாலாஜி டாஸ்மாக் கடைகள் பற்றி கூறுகையில், திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் 84 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன.  கோயில், பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் டாஸ்மாக் கடைகள் இருந்தால் மாற்றி தரப்படும். திமுக ஆட்சி பொறுப்பேற்றதற்கு பின்பாக பள்ளி, கல்லூரி, கோயில்களுக்கு அருகில் இருந்த 84 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன.  மேலும் இதுபோன்று இருப்பதாக புகார் வந்ததால் 2 நாட்களுக்குள் சரிசெய்யப்படும்” எனக் கூறினார்.