15 மாத யோசனைக்கு பிறகு வேறுவழியின்றி மின்கட்டணம் உயர்வு- அமைச்சர் செந்தில் பாலாஜி

 
senthil balaji

மக்களுக்கு தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்ய போதுமான காலமும் நிதியும் அரசிடம் இல்லாததால், தனியாருடன் இணைந்து செயல்பட்டே, மின்தேவையை பூர்த்தி செய்ய முடியும் என மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.

TN Minister's Twitter account briefly hacked | Cities News,The Indian  Express

ஃபிக்கி ((FICCI )) எனும் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பினர், சென்னை கிண்டியில் ஒரு கருத்தரங்கை நடத்தினர். இதில் உரையாற்றிய அமைச்சர் செந்தில் பாலாஜி, “தமிழகத்தின் மின் தேவை ஒரு நாளைக்கு சராசரியாக 17ஆயிரம் மெகாவாட்டாக உள்ளது. தேவைப்படும் மின்சாரத்தில் 25 விழுக்காடு மட்டுமே மின்வாரியம் மூலம் உற்பத்தி செய்யப்படுஈராஊ. மின் வாரியத்தின் சொந்த நிறுவுத் திறனை 32 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு  உயர்த்த முடியும் என்றாலும் 7125 மெகாவாட் மட்டுமே மின்வாரியத்தின் சொந்த நிறுவு திறனாக உள்ளது. 

அடுத்த 10 ஆண்டில் 65 ஆயிரம் மெகாவாட் அளவு தமிழகத்தில் மின் தேவை உயரும். மின் வாரிய சொந்த உற்பத்தியை 50 விழுக்காடாக அதிகரிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். கடந்த ஆண்டு காற்றாலை மூலம் உற்பத்தியான  மின்சாரத்தில் 100 விழுக்காடு மின்சாரமும்  வீணடிக்காமல் பயன்படுத்தப்பட்டுள்ளது. 105 மெகாவாட் அளவிற்கு சூரிய காற்றாலை மின்சார உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2030-ஆம் ஆண்டுக்குள்  உற்பத்தி செய்யப்படும் 20 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தில், 6 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் சொந்த உற்பத்தி நிறுவு திறன் மூலம் உற்பத்தி செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மக்களுக்கு தேவையான மின்சாரத்தை அரசே முழுவதுமாக உற்பத்தி செய்வதற்கான  காலமும் நிதியும் போதுமான அளவு இல்லாத நிலையில், தனியாருடன் சேர்ந்து பணியாற்றினால் தான், தமிழக மக்களுக்கான மின் தேவையை பூர்த்தி செய்ய முடியும். தனியார்  நிறுவனங்கள் மின் வாரியத்துடன் இணைந்து பயணிக்க, முழு ஒத்துழைப்பை மின் வாரியம் தரும்.15 மாதம் யோசித்த பிறகே, அனைவரும் ஏற்கத்தக்க வகையில் மின் கட்டணத்தை வேறு வழியின்றி 3200 கோடி ரூபாய் அளவு உயர்த்த உத்தேசிக்கப்பட்டது. 

தமிழகத்தில் மின்சாரம் உற்பத்தியாகும் இடத்திலிருந்து வீடுகளுக்கு மின்சாரத்தை கொண்டு சேர்க்கும்போது 15 விழுக்காடு மின் இழப்பு ஏற்படுகிறது. அதை 1 சதவீதம் குறைத்தாலும் பல கோடி மிச்சப்படும். தமிழகத்தில் தற்போது மூன்றரை கோடி மின் நுகர்வோர் இருக்கின்றனர். ஆண்டுக்கு 10 லட்சம் மின் நுகர்வோர் அதிகரிப்பர் என கணக்கிடப்பட்டுள்ளது” என விளக்கமளித்தார்.