நோட்டாவுடன் போட்டிபோடக்கூடிய கட்சியினர் கூறும் தவறான கருத்துக்களுக்கு பதிலடி கொடுக்கப்படும்- செந்தில் பாலாஜி

 
senthil balaji

இந்தியாவிற்கே வழிகாட்டக்கூடிய ஆட்சியை திட்டங்களை செயல்படுத்தக்கூடிய அரசு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு 
என மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

TN Minister's Twitter account briefly hacked | Cities News,The Indian  Express

கரூர் மாவட்டம் குளித்தலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திமுக மாவட்ட இளைஞரணி சார்பில்  திராவிட மாடல் அரசு பயிற்சி பட்டறை கூட்டம் நடைபெற்றது. இதில் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு  கட்சியின் செயல்பாடுகள், இளைஞர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என  குறித்து விரிவாக பேசினார். அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் 234 தொகுதிகளில் குளித்தலை தொகுதி மிகவும் சிறப்பு பெற்றது. தலைவர் கலைஞர் அவர்களை முதன் முதலில் சட்டசபைக்கு அனுப்பிய தொகுதி இது. மேலும் குளித்தலை குளித்தலையில் தலைவரின் திருவுருவச் சிலை அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் துவங்கப்பட உள்ளது. குளித்தலை பகுதி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று திமுக தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டதும் ரூபாய் 750 கோடி மதிப்பில் மருதூர் முசிறி காவேரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டுவதற்காக ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

டாக்டர் கலைஞரின் பொற்கால  ஆட்சிக் காலத்தில் குளித்தலை தொகுதிக்கு அரசு கலைக்கல்லூரி, ஒருங்கிணைந்த நீதிமன்றம், வருவாய் கோட்டாட்சியர், வட்டார பகுதி போக்குவரத்து அலுவலகம் அமைக்கப்பட்டது. குளித்தலை தொகுதி என்றும் தமிழக முதல்வரின் கவனத்தில் இருந்து வருகிறது விரைவில் அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவில் பயன்பாட்டிற்கு வரும். இளைஞர்களாகிய உங்களின் இலக்கு வரும்  2024 நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதியிலும் திமுக மகத்தான வெற்றி பெற இளைஞர் அணியினர் தீவிரமாக கட்சி பணி செய்திட வேண்டும். எதிர்க்கட்சிகள் நமது அரசை குறை கூறும்போது சமூக வலைதளங்களில் அவர்களின் கருத்துக்கு பதிலடி கொடுத்து கருத்து மோதல்கள் இருக்க வேண்டும், ஆனால் நேரடியாக எந்தவித மோதலும் இருக்கக் கூடாது. 

நோட்டாவுடன் போட்டிபோடக்கூடிய கட்சியினர் கூறும் தவறான கருத்துகளுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும். தமிழக முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் திராவிட மாடல் அரசு  இந்தியாவிற்கே வழிகாட்டக்கூடிய ஆட்சியையும், திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறோம். தமிழக முதலமைச்சர் இது எனது அரசு என்று கூறாமல் நமது அரசு என்று தான் கூறி அனைவரையும் சமமாக பார்க்கிறார்” எனக் கூறினார்.