திமுக அரசு பொறுப்பேற்றப்பின் 406 கோயில்களுக்கு குடமுழுக்கு- அமைச்சர் சேகர்பாபு

 
sekar babu tn assembly

திமுக அரசு பொறுப்பேற்றப்பின், 406 திருக்கோவில்களில் குடமுழுக்கு நடைப்பெற்றுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

Udayanithi Stalin to be included in Tamil Nadu cabinet: Minister Sekar Babu  | Udayanithi Stalin will be in the Tamil Nadu cabinet: Sekarbabu press meet  - time.news - Time News

சட்டப்பேரவையின் கேள்வி நேரத்தில், திமுக அரசு பொறுப்பேற்றப்பின் எத்தனை கோவில்களுக்கு குடமுழுக்கு மற்றும் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக சேலம் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் எத்தனை என்பது குறித்து சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சேலம் மாவட்டத்தில் திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து 15 திருக்கோவில்களுக்கு 2 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் திருப்பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாகவும், 20 திருக்கோவில்களில் மூன்று கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் திருப்பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்றும், 15 திருக்கோவில்களில் 3 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் கூறினார். மேலும், 43 லட்சம் மதிப்பீட்டில் மூன்று திருத்தேர்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, ஒன்பது லட்சம் மதிப்பீட்டில் மேலும் ஒரு திருத்தேர் திருப்பணிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அதேபோல், ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருக்கோவில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ள 100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறிய அவர், இதுவரை 104 திருக்கோவில்களில் திருப்பணிகள் நடைப்பெற்றுள்ளதோடு, 406 திருக்கோவில்களில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளதாகவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.