அறநிலையத்துறைக்கு சொந்தமான ரூ. 3,924கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்பு- சேகர்பாபு

 
sekarbabu

அறநிலையத்துறைக்கு சொந்தமான 3924கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதுவரையில் அறநிலையத்துறைக்கு சொந்தமான 1 லட்சம் ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்த ஆண்டுக்குள் 2 லட்சம் ஏக்கர் அளவீடு செய்யப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

sekar babu

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்திற்கு சொந்தமான 90 சென்ட் நிலத்தை அளவீடு செய்து வேலி அமைக்கும் பணியை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்து அளவீட்டு எல்லைக் கல்லைநட்டு வைத்தார். தொடர்ந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான ஒரு லட்சம் ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யும் பணி நிறைவையொட்டி இந்த பணியில் ஈடுபட்ட 172 நில அளவர்களை பாராட்டும் விதமாக பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்களை மீட்பதற்காக வருவாய்த்துறையில் இருந்து வட்டாட்சியர்களை பணியமர்த்தி ஆண்டுக்கு 10 கோடி ரூபாய் ஊதியம் வழங்கி பணிகள் நடைபெற்று வருகின்றன. அறநிலையத்துறைக்கு சொந்தமான 3924 கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த பணிகளை ஆவணப்படுத்தி புத்தகம் வெளியிட முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ரூ.5 லட்சத்திற்கும் மேற்பட்ட திருக்கோயில் நிலங்கள் கண்டறியப்பட்டு, இதுவரை 1 லட்சம் ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டுக்குள் 2 லட்சம் ஏக்கர் அளவீடு செய்யப்படும். 172 நில அளவர்கள் பாராட்டுக்குரியவர்கள்

பெரியபாளையம் பவானியம்மன் கோயிலுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.130 கோடி மதிப்பீட்டில் பெருந்திட்ட வரைவுக்கு முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளளார். நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிந்ததும் அனைத்து வசதிகளும் நிறைவேற்றப்படும். அனைத்து கோயில்களுக்கும் வெப்-சைட் உருவாக்கப்பட்டுள்ளதால், கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள் குறித்த தகவல்களை அவற்றின் மூலம் தெரிந்து கொள்ளளலாம். திருப்பணிகள் ஆரம்பித்து 18 ஆண்டுகள் கடந்த திருவட்டாறு கோவிலில் திமுக ஆட்சி அமைந்த பின்னரே குடமுழுக்கு நடத்தப்பட்டது. 1000 ஆண்டுகளுக்கு மேல் உள்ள கோயில்களுக்கு குடமுழுக்கு செய்ய 100 கோடி முதல்வர் வழங்கியுள்ளார். திருத்தணி முருகன் கோயிலில் ஆய்வு செய்த போது 12 ஆண்டுகளாக தங்கதேர் ஓடாமல் இருந்தது. அதனை சீரமைத்து 6 மாத காலத்திற்குள் தணிக்கை மலையை சுற்றி வர செய்துள்ள்,

365 படிகளை இணைக்கும் இடத்தில் கற்கள் போதிய அளவில் தரமில்லாததால் கல் அமைக்கும் பணிகள் தாமதமடைந்துள்ளன. அந்த விரைவில் பணிகள் தொடங்கப்பட உள்ளது. திருத்தணி முருகன் கோயிலுக்கு மாற்றப்பாதை ஏற்பாடு செய்யப்படும். வனத்துறை ஒப்புதலுடன் யானை வளர்த்து வருபவர்கள் கோயிலுக்கு கொடுக்கலாம் . அந்த யானையை அறநிலையத்துறை பராமரிக்க தயாராக உள்ளது” எனக் கூறினார்.