நாட்டுக்கு ஆளுநர் தேவை இல்லை என்பதுதான் திமுகவின் கொள்கை - அமைச்சர் சேகர்பாபு

 
sekar babu

ஆட்டுக்கு தாடி தேவை இல்லை என்பது போல் நாட்டுக்கு ஆளுநர் தேவை இல்லை என்பது தான் திமுகவின் கொள்கை என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். 
 
திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட கொருக்கு பேட்டை ஜெ. ஜெ நகர் பகுதியில் நடைபெற்றது. இதில் அமைச்சர் சேகர்ப்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதி மாறன் மற்றும் கலாநிதி வீராசாமி ஆர்கே சட்ட மன்ற உறுப்பினர் ஜே ஜே எபிநேசர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர். விழாவில் உரையாற்றிய அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது: திமுக ஆட்சி பொறுப்பேற்ற முதல் மாதத்திலேயே இருந்து தேர்தல் அறிக்கையில் கூறியதை என்ன நிறைவேற்றி இருக்கிரீர்கள் என எதிர்க்கட்சிகள் கேட்கின்றனர்.  ஆனால், ஒரு ஆண்டு நிறைவு அடைவதற்குள் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த 520 வாக்குறுதிகளில் 360 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிய அரசு இருக்கிறது என்றால் இந்திய துணைக்கண்டத்திலேயே அது தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தான். 

sekar babu

இந்த ஆட்சிக்கு ஏதாவது தொல்லை கொடுக்க வேண்டும் என்று உடனடியாக இந்தி திணிப்பை கொண்டு வருகிறார்கள். நாங்கள் பாணிபுரி விற்பது தவறு என்று சொல்லவில்லை. பாணிபுரியை சாப்பிட வேண்டும் என திணிப்பதை தான் தவறு என்கிறோம் என்றார் நாங்கள் இந்தியை எதிர்ப்பவர்கள் அல்ல. இந்தி திணிப்பை தான் எதிர்ப்பவர்கள். திமுகவின் கொள்கை ஆட்டுக்கு எப்படி தாடி தேவை இல்லை என்பது போல் நாட்டுக்கு ஆளுநர் தேவை இல்லை என்பது தான். 
கட்சி முக்கியமா ஆட்சி முக்கியமா என்று கேட்டால் கொள்கை தான் முக்கியம் என்று முதலமைச்சர் ஆட்சியில் இருப்பார். ஐந்து ஆண்டுகள் செய்ய வேண்டிய வேலையை ஓர் ஆண்டுகளில் நிறைவேற்றியவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்றார்.