பொங்கல் பரிசு தொகுப்பு 72% வழங்கப்பட்டுள்ளது- அமைச்சர் சக்கரபாணி

 
minister sakkarapani

பொங்கல் பரிசு தொகுப்பு 72 சதவீதம் வழங்கப்பட்டிருப்பதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். 

பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பாக நத்தம் விசுவநாதன் பேரவையில் எழுப்பிய கேள்விக்கு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி பதிலளித்தார். அப்போது பேசிய அவர், கொரோனா காலத்தில் தேர்தல் வாக்குறுதி படி ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் 4000 ரூபாய் வழங்குவதாக முதலமைச்சர் தெரிவித்தார். அதை வழங்கவும் செய்தார்.

2018 -2019 ஆம் ஆண்டுகளில் ஆயிரம் ரூபாய் அதிமுக ஆட்சியில் வழங்கினார்கள். 2021 ஆம் ஆண்டு 2500 ரூபாய் பொங்கல் பரிசாக  தேர்தலுக்காக வழங்கியது என்பது மக்களுக்கே தெரியும். அதனால் தான் மக்கள் அதை வாங்கிக்கொண்டு ஏமாறாமல் தமிழ்நாடு முதலமைச்சராக மு.க. ஸ்டாலினை தேர்ந்தெடுத்தனர் என்றார். இப்பொழுது 2500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, குடும்ப அட்டைத்தாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் மற்றும் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இன்று நண்பகல் 1.30 நிலவரப்படி 72 சதவீதம் மக்கள் அதைப் பெற்று மகிழ்ச்சியுடன் பயனடைந்து வந்துள்ளனர் என்றும் அமைச்சர் சக்கரபாணி கூறினார்.