அமலாக்கத்துறை மிரட்டலுக்கு பயப்படுகிற கட்சி திமுக அல்ல- அமைச்சர் ரகுபதி

 
Minister sakkarabani

அமலாக்கத்துறை தங்கள் கையில் தான் இருக்கிறது என்பதை வெளிப்படையாக ஒரு கட்சி ஒப்புக் கொண்டுள்ளது, ஒரு கட்சியினுடைய கிளைக் கழகமாக அமலாக்கத்துறையை நினைத்து கொண்டு இருந்தால் அதை விட வெட்க கேடு இந்திய ஜனநாயகத்திற்கு கிடையாது என தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

S. Regupathy - Wikipedia

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் 4.75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட கலையரங்கத்தை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார். அப்போது பேசிய அமைச்சர் ரகுபதி, “ஒரு கட்சியினுடைய கிளைக் கழகமாக அமலாக்கத்துறையை நினைத்து கொண்டு இருந்தால் அதை விட வெட்க கேடு, இந்திய ஜனநாயகத்திற்கு கிடையாது.  அடுத்த வாரம் அமலாக்கத்துறை வரப்போகிறது என்று மிரட்டுகிறார்கள்,மிரட்டலுக்கு பயப்படுகிற கட்சி திமுக அல்ல என்றும் அமலாக்கத்துறை அடுத்த வாரம் இங்கே வருகிறார்கள், அங்கே வருகிறார்கள் என்று முன்னறிவிப்பு கொடுக்கிற பணியை ஒரு கட்சி செய்து கொண்டிருக்கிறது. அதைவிட ஜனநாயகத்திற்கு வேறு கேவலம் இல்லை, அமலாக்கத்துறை தங்கள் கையில் இருக்கிறது என்பதை வெளிப்படையாக ஒப்புக் கொண்டிருக்கிறார்கள் அதற்கு நன்றி. 

எங்கள் மீது எந்த தவறும் கிடையாது நாங்கள் எதற்கும் பயப்படவில்லை நாங்கள் யார் யார் வீட்டில் எல்லாம் ரெய்டு நடத்தினோமோ அவர்களே இல்லங்களில் இன்று  அமலாக்கத்துறை கோடிக்கணக்கான ரூபாயை கண்டுபிடித்து இருக்கிறார்கள். நாங்கள் செய்த ரெய்டை நியாயப்படுத்தும் வகையில் அவர்கள் வலிமைப்படுத்தி உள்ளார்கள் அதற்கு நன்றி சொல்ல கடமை பட்டு உள்ளோம். எதற்காகவும் பயப்படுகிறவர்கள் நாங்கள் அல்ல எங்கள் அமைச்சர்கள் அல்ல, எதையும் வெளிப்படையாக செய்யக்கூடிய அமைச்சர்கள் தான் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் உள்ள அமைச்சர்கள், திமுகவை அச்சுறுத்தி மிரட்டி பணிய வைக்க முடியாது மிரட்டி பணிய வைக்கிற கட்சி திமுக கிடையாது. ஒரு வருடத்திற்குள் தேர்தல் வாக்குறுதியை எந்த கட்சியும் நிறைவேற்றியதாக வரலாறு கிடையாது. செஸ் ஒலிம்பியாட் போட்டியை தமிழக முதல்வர் தலைமை ஏற்று சிறப்பாக நடத்தி வைத்து உள்ளார். இந்தியாவில் உள்ள வேறு எந்த முதல்வராலும் இதை செய்திருக்க முடியாது‌ ஆங்காங்கே தனியார் பள்ளிகளில் தற்கொலைகள் நடைபெறுகிறது அந்த பள்ளிகளில் உள்ள சிறு சிறு பிரச்சனைகள் தான் காரணம் தற்போது அதற்கு தீர்வு காண மாணவ மாணவிகளுக்கு மன உளைச்சலுக்கு ஆளாகாமல் இருப்பதற்கு கவுன்சிலிங் கொடுக்க எல்லா பள்ளிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது‌” எனக் கூறினார்.