தமிழ்நாட்டில் தோன்றிய பழமையான விளையாட்டுதான் தான் செஸ்- அமைச்சர் நாசர்

 
Nasar

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே பூவலூர் என்கிற கிராமத்தில் அமைந்துள்ள சதுரங்க வள்ளநாதர் கோவில் உள்ளது. 1500 ஆண்டுகளுக்கு முன்பு பழமை வாய்ந்த அந்த கோவிலின் மூலவர் சதுரங்க வள்ளநாதருடைய பெயரில் தான் செஸ் விளையாட்டை முன்னோர்கள் விளையாடி உள்ளனர் என பால் வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் தெரிவித்துள்ளார். 

Minister Nasar

ஆவடி மாநகரட்சி வந்தடைந்த 44-வது  சதுரங்க ஒலிம்பியாட் ஜோதியை தமிழக பால்வளதுறை அமைச்சர் சா.மு.நாசர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சி தலைவர் ஆல்பி ஜான் வர்கீஸ்  மாவட்ட திட்ட அலுவலர் ஜெயக்குமார் ஆகியோர் இணைந்து 44 வது செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு ராட்சத பலூனை பறக்கவிட்டனர். பின்னர் செஸ் ஒலிம்பியாட் ஜோதியுடன் ஸ்கூட்டர் பேரணியை  கொடியசைத்து  துவக்கி வைத்த அமைச்சர் நாசர் ஆவடி மாநகராட்சி அலுவலகம் முதல் பட்டாபிராம் காவல் நிலையம் வரையிலான சுமார் 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு இருசக்கர வாகனத்தில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு பதாகைகளுடன்  பேரணி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நாசர், “ரஷ்யாவில் நடைபெற வேண்டிய இந்த 44 வது ஒலிம்பியாட்  செஸ் போட்டியானது அங்கு நடைபெறுகின்ற போரின் காரணமாக எந்த நாட்டில் நடத்தலாம் என முடிவெடுத்த பொழுது இந்தியாவில் குறிப்பாக அமைதி பூங்காவாக உள்ள தமிழகத்தில் நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. முதல்வரின் பெரும் முயற்சியால் 100 கோடி ரூபாய்  பொருட் செலவில் ஒலிம்பியாட் என்னும் சிறப்புமிக்க நிகழ்வு  இங்கு நடைபெறவுள்ளது. மிகவும் பழமையான சதுரங்க விளையாட்டு  ஏறக்குறைய, கிறிஸ்து பிறப்பதற்கு முன் 6000 ஆண்டுகளுக்கு முந்தைய சதுரங்க போட்டி இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் திருவாரூர் மாவட்டத்தில் நீடாமங்கலம் அருகே பூவலூர் என்கிற கிராமத்தில் சதுரங்க வல்லநாதர் கோவில் 1500 ஆண்டுகள் பழமையானது, அந்த கோவிலின் மூலவர் சதுரங்க வள்ளநாதர் அவருடைய பெயரில் தான் இந்த செஸ் விளையாட்டு. நமது ஒவ்வொரு ஆராய்ச்சியாளர்களும் அந்த காலத்திலேயே  செஸ் காயின்கள் வடிவமைக்கப்பட்டடுள்ளது. ஆகவே மிகவும் பழமையும் தொன்மை வாய்ந்த தமிழகத்தில் உருவாக்கப்பட்ட உருவான இந்த செஸ் போட்டியானது இன்றைய தினம் தமிழகத்தில் 44 வது  ஒலிம்பியாட் செஸ் போட்டி நடைபெறுவது மகத்தான மகிழ்ச்சியான விஷயம்” எனக் கூறினார்.