கரப்பான் பூச்சி, மூட்டை பூச்சிகளை அழிக்கவந்த பூச்சிக்கொல்லைதான் திமுக- அமைச்சர் மனோ தங்கராஜ்

 
mano

சமூகத்தில் கரப்பான் பூச்சுகளாகவும் மூட்டை பூச்சுகளாகவும் இருக்கும் ஒரு  கூட்டத்தை அழிக்க வந்த பூச்சி கொல்லி தான் திமுக என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

Address of the Hon'ble IT Minister Thiru T Mano Thangaraj in the Global  Virtual Technology Summit on 18th September 2021 | Tamil Nadu Information  Technology Department

கன்னியாகுமரி மாவட்டம் ஆரோக்கியபுரத்தில் மீனவர்களுக்கான எரிப்பொருள் விற்பனை நிலையத்தை அமைச்சர் மனோ தங்கராஜ் துவங்கி வைத்தார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “இந்த சமூகத்தை மூட்டை பூச்சியாக சிலந்தியாக ஏற்ற தாழ்வுடன்  ஒரு கூட்டம் வைத்து இருந்தது. திமுக இந்த மூட்டை பூச்சிகளையும் கரப்பான் பூச்சிகளையும் அழித்து கொள்ளும் பூச்சி கொல்லி.  திராவிட இயக்கத்தின் கோட்பாடுகளால் தான்  பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த தமிழிசை சவுந்தராஜன் ஆளுநராக இன்று பதவிக்கு வர முடிந்தது. இப்பொழுதும் தமிழிசை அவர்கள் எங்கிருந்து பேசுகிறார்கள்? எதற்காக பேசுகிறார்கள்? என தெரியாமல் பேசுகிறார்.

திமுக பதவிக்கான இயக்கம் அல்ல, மக்களுக்கான இயக்கம். ஆளுநர் பதவி என்பது அரசியலுக்கு அப்பாற்பட்டது. ஆளுநர்கள் அவசரப்பட்டு பேசுவதை பார்த்து இவர்களுக்கு மைக் மேனியாவா? என பொதுமக்கள் கேள்வி கேட்கிறார்கள்” என தெரிவித்தார்.