கடந்த ஓராண்டுகளில் 70 போலி மருத்துவர்கள் கண்டறியப்பட்டு நடவடிக்கை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

 
ma Subramanian

கடந்த ஓராண்டுகளில் 70 போலி மருத்துவர்களை கண்டறிந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

உலக பல்சீரமைப்பு நல தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள சர்விஸ் சாலையில் 200க்கும் மேற்பட்டோர் 1 கிலோமீட்டர் தொலைவில், பல் சீரமைப்பு தொடர்பான விழிப்புணர்வு பேரணியை நடத்தினர். இந்திய மற்றும் சென்னை பல்சீரமைப்பு சங்கம் சார்பாக பல்சீரமைப்பு நிபுணர்கள் மற்றும் துறை மாணவர்கள் உலக பல் சீரமைப்பு நல தினத்தை முன்னிட்டு, பல் சீரமைப்பின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி சென்றனர்.விழிப்புணர்வு பேரணியில் சிறப்பு விருந்தினராக  மருத்துவம் மற்றும் மக்கள்  நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் த.வேலு  கலந்துகொண்டு விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தனர்.

ma subramanian

அதற்கு முன்பாக மாணவர்கள் மற்றும் மருத்துவர்கள் முன்னிலையில் பேசியவர்; சொல்லுக்கும் பல்லுக்கும் அவசியம் உள்ளது எனவே இந்த பேரணி அவசியம்.
பல் மருத்துவத்தில் போலி மருத்துவர்கள் அதிகரித்துள்ளனர் என  தற்போது விடுத்துள்ள கோரிக்கையின் அடிப்படையில்,பல் மருத்துவ சங்கம் போலி பல் மருத்துவர்களை  ரகசிய முறையில் தகவல் தெரிவித்தால் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் உங்கள் சங்கம் சார்பாக ரகசியமாக தகவல் தெரிவித்தால் கட்டாயம் அவர்கள் போலி பல் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும். தமிழகம் முழுக்க உள்ள பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் காலிப்பணியிடங்களை நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது என்றார். 

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மா.சுப்பிரமணியன் பேசியதாவது: கடந்த ஓராண்டில் மட்டும்  போலி பொதுநல மருத்துவர்கள் என தமிழகம் முழுவதும்  70 போலி மருத்துவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அதுபோல பல் மருத்துவ சங்கம் விடுத்த  கோரிக்கையின் அடிப்படையில்  போலி பல் மருத்துவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.