பேரவையில் ஓபிஎஸ் கேட்ட கேள்வி! அமைச்சரின் அதிரடி பதில்!

 
ops

ஒரு சென்ட் நிலத்தை கூட அண்டை மாநிலங்களுக்கு விட்டுக் கொடுக்கமாட்டோம் என்று வருவாய்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Virudhunagar bags two ministries - The Hindu


சட்டப்பேரவையில் கேரள எல்லைப் பகுதியில் கேரளா அரசு டிஜிட்டல் சர்வே எடுப்பது குறித்து தகவல் வருகிறது என்றும், தமிழக எல்லைப் பகுதியில் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழ்நாடு அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் எதிர்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் கே.கே. எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், சர்வே நடைபெற்று வருவதாகவும், நம் எல்லை பகுதியில் அவர்கள் இந்த சர்வே எடுக்கவில்லை எனவும் தெரிவித்தார்.  நம் பகுதியில் இது போன்ற சர்வேக்களை எடுப்பதற்கு முன் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கேரளா அரசிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

அண்டை மாநிலங்களின் மாவட்ட எல்லை பகுதிகளில் உள்ள ஆட்சியர்கள் இடமும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார். முதலமைச்சர் மிகுந்த எச்சரிக்கையோடு இதை கவனித்து வருவதாகவும், தேனி மாவட்டம் மட்டுமல்ல  மாநிலத்தின் எந்த எல்லை பகுதியிலுள்ள மாவட்டங்களிலும் ஒரு சென்ட் நிலம் கூட இந்த அரசு அண்டை மாநிலத்துக்கு விட்டுத்தராது என அமைச்சர் தெரிவித்தார்.