அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது- காமராஜ்

 
kamaraj

அதிமுகவில் உள்ளே இருப்பவர்களும், வெளியில் இருப்பவர்களும் ஏன் யாராக இருந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது  என முன்னாள் அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

R Kamaraj FIR ஆர்.காமராஜ் எப்.ஐ.ஆர் விவரம்: அடேங்கப்பா இத்தனை கோடி சொத்தா?  - the fir details of former aiadmk minister r kamaraj have been released -  Samayam Tamil

திருவாரூர் மாவட்டம் கோட்டூரில் திருத்துறைப்பூண்டி தொகுதி எம்ஜிஆர் 106-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.  இதில் கலந்து கொண்டு முன்னாள் உணவுத்துறை அமைச்சரும் கழக அமைப்பு செயலாளரும் காமராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கோட்டூர் ஒன்றிய செயலாளர்கள் ஜீவானந்தம் , ராஜா.பா.சேட் ,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் , டாக்டர் கோபால் ,  மன்னார்குடி நகர செயலாளர் ஆர்.ஜி. குமார், கழக அமைப்பு செயலாளர் சிவா.ராஜா மாணிக்கம், தலைமை கழக பேச்சாளர்கள் உள்ளிட்ட அதிமுக, மாவட்ட  , ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ், “அண்ணா திமுகவிற்கு அழிவே கிடையாது. அதிமுகவில் உள்ளே இருப்பவர்களாலும் , வெளியில் இருப்பவர்களாலும் யாராக இருந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது. இது புரட்சித்தலைவர் எம்ஜிஆர் , புரட்சி தலைவி அம்மா கட்டிகாத்த இயக்கம் அண்ணன் எடப்பாடியார் வழி நடத்துகிற இயக்கம் . எப்போது தேர்தல் வந்தாலும் அதிமுகவே வெல்லும். ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக மிக பெரிய வெற்றியை பெரும் , எடப்பாடியார் அறிவிக்கின்ற வேட்பாளர்  வெற்றி பெறுவார், இதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது” என்றார் .