"பரந்தூர் விமான நிலையத்துக்கு இடம் தருவோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, 3 மடங்கு பணம்"

 
ev velu

பரந்தூர் விமான நிலையத்திற்கு 
கையகப்படுத்தும் நிலத்திற்கான சந்தை மதிப்பை விட 3 அரை மடங்கு இழப்பீடு அதிகமாக வழங்கப்படுவதோடு, குடும்பத்தில் ஒருவருக்கு தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பு வழங்கப்படும் பொதுப்பணித் துறை  அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் பரந்தூரில் அமையவுள்ள விமான நிலையம் தொடர்பாக தமிழக அமைச்சர்கள் எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். 

அப்போது பேசிய அமைச்சர் வேலு,  பரந்தூரில் புதிய விமானநிலையம் அமைக்க வேண்டும் என்ற அடிப்படையில் நிலங்கள் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருவதாகவும், 
கையகப்படுத்தும் நிலத்திற்கு சந்தை விலையைவிட 3 அரை மடங்கு இழப்பீடு அதிகமாக வழங்கப்படும் என கூறினார். 

நிலங்கள் அனைத்தும் 2013ல் கொண்டு வரப்பட்ட  (Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement Act, 2013) சட்டத்தின் கீழ் கையகப்படுத்தப்படவுள்ளது. மொத்தம் 13 கிராமத்தில், 1005 வீடுகள் அப்புறப்படுத்த உள்ளதாகவும்,  கையகப்படுத்தும் நிலத்திற்கு பணமும், வீடு கட்டுவதற்கு நிலமும், பணமும் வழங்க உள்ளோம். விமானநிலையம் அமைக்கப்படும் இடத்திற்கு அருகாமையில்,
விரும்பக்கூடிய இடத்தில் வசிப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும் எனவும்,
அப்பகுதியில் வசிப்பவர்களின் தகுதிக்கு ஏற்ப வேலைவாய்ப்பு உருவாக்கி தரப்படும் எனவும் கூறினார்.

விவசாயிகள் எந்தவிதத்திலும் பாதிக்ககூடாது என்பதில் முதல்வர் ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார். ஆனால், இதுபோன்ற பொது நோக்கத்திற்கான திட்டங்கள் வரும்போது விவசாய நிலத்தை எடுப்பதை தவிர வேற வழி இல்லை. பெங்களூர், ஹைதராபாத் வளர்ச்சி நம்மை விட கூடுதலாக உள்ளது.
மற்ற மாநிலங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது நமக்கு புதிய விமான நிலையம் அவசியமாக உள்ளது. பன்னூர், பரந்தூர் ஆகிய இடங்களில் ஒப்பிட்டு பார்க்கும் போது, பரந்தூரில் குறைந்த வீடுகள் தான் உள்ளது. அதனால் தான் பரந்தூர் பகுதி தேர்வு செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்படும் மக்களும் குறைவு என்றார்.

தமிழகத்தின் பொருளாதாரம், அந்நிய செலாவணி ஈட்டுவதற்காக முதல்வர் ஸ்டாலின், புதிய விமான நிலையத்தை அமைக்க முடிவு செய்துள்ளார்.விமான நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ள
13 கிராமங்களில், நன்செய் 2446.79 ஏக்கர் புன்செய் நிலத்தை 
பொறுத்தவரையில் 799.59 ஏக்கருக்கு
1317.18 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலுமும் உள்ளது. இதில் 4563.56 ஏக்கர் நிலம் கையகபடுத்த உள்ளோம். 3246 ஏக்கர் பட்டா நிலம் உள்ளது என்று கூறினார்.

புதிதாக அமைக்கபட உள்ள
விமான நிலையத்தில் நீர் நிலைகள் பாதிக்காத வகையில், சென்னை விமான நிலையத்தில் அமைக்கப்பட்டு போல் ஓடுதளம் அமைக்கப்படும் என்றும் எட்டுவழி சாலை திட்டத்தை எதிர்த்தது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், சாலை திட்டத்துக்கு நாங்கள் எதிரானவர்கள் இல்லை எனவும், 8 வழிச்சாலை பணிகளின் போது, 
விவசாயிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, மாற்று வழியில் திட்டத்தை செயல்படுத்துங்கள் 
என்று தான் சொன்னோம் என கூறினார்.