லிப்டில் சிக்கிக்கொண்ட அமைச்சர் சிவசங்கர் - பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

 
perambalur

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக லிப்டில் அமைச்சர் சிவசங்கர் சிக்கிக்கொண்ட சம்பவம் ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை நடத்துவதற்காக தமிழக போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அதிகாரிகளுடன் சென்றார்.  இதனை தொடர்ந்து அமைச்சர் சிவசங்கர் தரை தளத்தில் இருந்து முதல் தளத்துக்கு லிப்டின் மூலம் செல்ல திட்டமிட்டார். இதனையடுத்து அதிகாரிகள் மற்றும் அமைச்சர் லிப்டில் ஏறி மாவட்ட ஆட்சியர் அலுவலக முதல் தளத்திற்கு சென்றுகொண்டிருந்தார். 

அப்போது திடீரென்று லிப்டின் இயக்கம் தடைபட்டது. அமைச்சர் லிப்டில் மாட்டிக்கொண்ட தகவல் அறிந்து விரைந்து வந்த ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் அமைச்சர் சிவசங்கரை லிப்டில் இருந்து பத்திரமாக மீட்டனர். சுமார் 15 நிமிடமாக அமைச்சர் சிவசங்கர் லிப்டில் மாட்டிக்கொண்டார். அமைச்சர் சிவசங்கர் மாவட்ட ஆட்சியர் அலுவலக லிப்டில் மாட்டிக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஸ்டான்லி மருத்துவமனை லிப்டில் சிக்கிக்கொண்டது குறிப்பிடதக்கது.