தொடர் மழையிலும் மின் விநியோகத்தில் பாதிப்பிவில்லை - அமைச்சர் செந்தில் பாலாஜி

 
senthil balaji

தமிழ்நாட்டில் தொடர் மழையிலும் மின் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படவில்லை எனவும்,  தடையின்றி மின் விநியோகம் செய்ய பணியாளர்கள் 24 மணி நேரமும் பணியில் ஈடுபட்டுள்ளனர் எனவும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். 

சென்னையில் தற்போது பருவமழை பெய்து வரும் நிலையில், பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் ஒருசில இடங்களில் மின்வெட்டு ஏற்படும் அபாயங்களும் உள்ளன. இந்நிலையில்,  சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு மேற்கொண்டார். அப்போது பருவமழையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது; சென்னையில் மழையின் போதும் மின்தடை இல்லை. புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் தொடர் மழையிலும் மின் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படவில்லை. கடந்த ஆண்டுகளில் சிறிய மழைக்கே மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. ஆனால் இந்தாண்டு தடையின்றி மின் விநியோகம் செய்ய பணியாளர்கள் 24 மணி நேரமும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.