சமூக வலைதளத்தில் மட்டுமே செயல்படும் கோமாளி கட்சி பாஜக - அமைச்சர் கடும் தாக்கு

 
senthil balaji

களத்திற்கு சென்று கட்சியை வளர்க்கும் கட்சிகள் மத்தியில் பாஜகவினர் சமூக வலைதளங்களில் மட்டுமே செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள் என அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சித்துள்ளார்.

காளப்பட்டி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட திமுக கட்சி நிர்வாகிகள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் குறித்தும், களப்பணி குறித்தும் விவாதிக்கப்பட்டது.

 இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில், வரைவு வாக்காளர் பட்டியல் தொடர்பாக இந்த செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என கூறினார். அப்போது செய்தியாளர்கள்  பாஜகவின் நாடாளுமன்ற தேர்தல் திட்டங்கள் குறித்த கேள்வி எழுப்பினர். இதனால் சற்று ஆத்திரமடைந்த அமைச்சர்,  கோமாளிகள் சம்பந்தப்பட்ட கேள்விகளை கேட்க வேண்டாம் என கூறியதோடு.. களத்திற்குச் சென்று கட்சியை வளர்க்கும் கட்சிகளுக்கு மத்தியில் சமூக வலைத்தளங்களில் மட்டுமே செயல்பட்டுக் கொண்டிருக்கும் கோமாளிகளை(பாஜக) பற்றி கேட்க வேண்டாம் என்றார்.