ஈஸ்வரன் கோவிலில் கந்தசஷ்டி கவசம் படித்த கோமாளி அண்ணாமலை - செந்தில் பாலாஜி தாக்கு

 
senthil

ஈஸ்வரன் கோவிலில் கந்த சஷ்டி கவசம் படித்த அண்ணாமலை போன்ற கோமாளியை உலகத்தில் எங்கேயும் பார்க்க முடியாது என, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடுமையாக விமர்சித்துள்ளார். 

கோவையில் தமிழ்நாடு நாளையொட்டி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்துகொண்டார். இதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து செய்தியாளர்கள கேள்வி எழுப்பிய நிலையில், சற்று ஆத்திரமடைந்த அவர், அந்த கோமாளியை பற்றி கேள்வி கேட்க வேண்டாம் என கூறினார். தொடர்ந்து அவர் கூறியதாவது: கோட்டை ஈஸ்வரன் கோயிலில் அமர்ந்து, கந்த சஷ்டி கவசத்தை படிச்ச கோமாளி அண்ணாமலை. இந்த கோமாளியை வேறு எங்கும் பார்க்க முடியாது. ஆகையால் அந்த கோமாளி சேர்ந்த கேள்விகளை தயவு செய்து கேட்காதீர்கள். முதலமைச்சரின் செய்திகளை விட, சில கோமாளிகளின் செய்திகள் தான் ஒருசில பத்திரிக்கைகளில் தலைப்புச் செய்தியாக வருகிறது. செய்திகள் வெளியிடுவதில் பத்திரிக்கையையோ, தொலைக்காட்சிகளையோ ஆளும் கட்சியினர் மிரட்டியது கிடையாது. பாஜகவினர் செய்வது போல் ஆளுங்கட்சியினர் செய்வது கிடையாது. பத்திரைக்கையாளர்கள் மீது அக்கறை கொண்ட ஒரே தலைவர் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான். அதனால் தான் ஓய்வுபெற்ற பத்திரிக்கையாளர்களுக்கு மாதம் 10 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்கியுள்ளார். இவ்வாறு கூறினார்.