அண்ணாமலை ஒரு அரசியல் கோமாளி - அமைச்சர் செந்தில் பாலாஜி காட்டம்

 
senthil

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு அரசியல் கோமாளி என தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி காட்டமாக தெரிவித்துள்ளார். 

ராமநாதபுரம் 80 அடி சாலையில் சாலை சீரமைப்பு பணிகளை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: அதன்பின், செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது:- கோவை கார் வெடிப்பு சம்பவம் நடந்த பின்னர் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து மக்கள் நிம்மதியான வாழ்க்கை வாழ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் மிக விரைவாக நடவடிக்கை எடுத்ததாக தொழில் முனைவோர் முதலமைச்சருக்கு பாராட்டு தெரிவித்தனர். பா.ஜ.க.வினர் அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பது எடுபடாது. கோவை காவல்துறை இவ்வழக்கை மிகத் திறமையாக கையாண்டுள்ளது. 

senthil balaji

கட்சி தலைமைக்கு தெரியாமல் பா.ஜ.க. மாவட்ட நிர்வாகிகள் எப்படி பந்த் அறிவிக்க முடியும்? கட்சியை சரியான வழிநடத்தும் தலைவர் என்றால் ஏன் ஒப்புதல் இல்லாமல் பந்த் அறிவித்தார்கள் என கேட்டிருக்க வேண்டும். நீதிமன்றத்தில் தனக்கு தொடர்பில்லை என்பது முறையானது அல்ல. அக்கட்சியினருக்குள் ஒரு முடிவுக்கு வரவேண்டும். பா.ஜ.க. மாநிலத் தலைவர் ஒரு அரசியல் கோமாளி. அரசியல் கோமாளி தொடர்பான கேள்விகளை என்னிடம் கேட்க வேண்டாம். இவ்வாறு கூறினார்.