திமுக ஆட்சியில் ரூ.3,700 கோடி கோயில் சொத்துக்கள் மீட்பு- அமைச்சர் சேகர்பாபு

 
sekar babu

நெல்லையில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு நெல்லை மாவட்டத்தில் ஆய்வுகளை மேற்கொண்டார் . சுமார் 4 கோடியே மூன்று லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில் அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோயிலில் அம்மன் சன்னதி மேற்கு பிரகாரம் மண்டபம், கரு உருமாறி தீர்க்க குளம் ,அம்மன் சன்னதி மேற்கூரை தட்டோடு சீரமைத்தல் ஆகிய திட்டன்களை தொடங்கி வைத்தார்.

Stalin will take call on pattinapravesam: PK Sekar Babu- The New Indian  Express

அதன்பின் செய்தியாளர்கள் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, “தமிழகம் முழுவதும் இதுவரை 3,700 கோடி ரூபாய் அளவில் கோயில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது. 200 கோடி ரூபாய் நிலுவையில் உள்ள வாடகை கட்டணங்கள் வசூலிக்கப்பட்டுள்ளது. பயன்படுத்தப்படாமல் உள்ள கோயில் நிலங்களை கண்டறிந்து வருவாய் ஈட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதுமுள்ள 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த சிறு கோயில்களை புனரமைக்க 100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அரசின் தொல்லியல்துறை யின் கீழ் உள்ள கோயில்களுக்கு கும்பாபிஷேகம் செய்ய அனுமதி கொடுத்தால் இந்துசமய அறநிலையத்துறை உடனே நடத்த தயார்.  மேலும் 11 கோவில்களின்  கோயில்கள் திருமேனி பாதுகாப்பு அறைகளின் காவலர்களை நியமிப்பதற்கான காவல்துறையின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது .விரைவில் திருமேனி பாதுகாப்பு அறைகள் திறக்கப்படும். திருக்கோயில்கள் புனரமைப்பு பணிக்காக பங்கீடு அளிக்க விரும்பும் உபயதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அந்த நடைமுறை எளிமையாக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.