955 துணை பேராசிரியர்கள் பணி நிரந்தரம் - அமைச்சர் பொன்முடி தகவல்

 
ponmudi

கடந்த 2012-ம் ஆண்டு பணிக்கு நியமிக்கப்பட்ட 955 துணை பேராசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். 

தமிழக உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சென்னை தலைமை செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அபோது அவர் கூறியதாவது: அரசு கல்லூரிகளில் பணியாற்றி வருகின்ற உதவி பேராசிரியர்கள் பணியை வரைமுறை படுத்த வேண்டும் என்பதற்காக, கடந்த 2012-ம் ஆண்டு பணிக்கு நியமிக்கப்பட்ட 955 துணை பேராசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களை அப்போதே பணி நிரந்தரம் செய்வோம் என்று கடந்த அ.தி.மு.க. ஆட்சி அறிவித்தது. ஆனால் அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படாத காரணத்தினால் இன்று கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்குப் பிறகு பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர்.    பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட 1030 ஆசிரியர்களுக்கு அடுத்த வாரம் பணி ஆணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார். பொறியியல் கலந்தாய்வு முதற்கட்டம் முடிந்து விட்டது. இதில் 10,351 பேர் மாணவர்கள் கலந்து கொண்டு உள்ளனர். அதில் 6,009 பேர் கல்லூரிகளில் சேர்ந்து விட்டனர். புதிய கல்வி கொள்கையை தமிழக அரசு ஏற்காது. தமிழ்நாட்டிற்கு, கல்விக்கு என்று ஒரு கல்விக் குழுவை உருவாக்கி அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தான் தமிழகத்தின் கல்வித் திட்டம் இருக்கும். அதற்கு எதிராக வேறுபட்ட கருத்து இல்லை. இவ்வாறு அமைச்சர் பொன்முடி கூறினார்.