கூட்டுறவுத்துறையின் செயல்பாடுகளில் திருப்தியில்லை - அமைச்சர் பரபரப்பு பேச்சு

 
ptr ptr

கூட்டுறவுத்துறை வளர்ச்சியின் செயல்பாடுகளில் தனக்கு திருப்தியில்லை என தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். 

மதுரையில் அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டார். இதில் பங்கேற்ற அவர், பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் விழாவில் பேசிய நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், கூட்டுறவு சங்கங்கள் முழுமையான கணிணி மயமாக்காமல் இருப்பதால் பல பிழைகள் நடைபெறுவதாக தெரிவித்தார். நடமாடும் ரேசன்கடைகள் உரிய நேரத்திற்கு செல்வதில்லை என்ற அவர், கூட்டுறவுத்துறை வளர்ச்சியின் செயல்பாடுகளில் நிதியமைச்சராக தனக்கு திருப்தி இல்லை என்றும் கூறினார்.

நிதி அமைச்சராக உள்ள பழனிவேல் தியாகராஜன், கூட்டுறவுத்துறை வளர்ச்சியின் செயல்பாடுகளில் தனக்கு திருப்தி இல்லை என கூறியது அரசியல் விமர்ச்கர்களிடையே பெரும் பரபரப்பை ஏர்படுத்தியுள்ளது.