"அமைச்சர் பிடிஆர் பழனிவேல் என் செருப்புக்கு கூட நிகரில்லை" - அண்ணாமலை கடும் தாக்கு!

 
ttn

தமிழகத்தின் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி மதுரை விமான நிலையத்தில் செருப்பு வீசப்பட்டது.  இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் பாஜகவை சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக அண்ணாமலை பேசியதாக கூறி ஆடியோ ஒன்று வெளியானது. ஆனால் திமுகவினர் ஆடியோவை எடிட் செய்துள்ளனர் என்று அவர் தெரிவித்திருந்தார்.

ptr
இதுகுறித்து பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், முன்னோர்களின் பெயரைக் கொண்டு பிடிஆர் பழனிவேல் தியாகராஜனும் அவரது கூட்டமும் வாழ்கின்றனர். தானாக உருவாகியிருக்கும் ஒரு விவசாயின் மகனை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பெரிய பரம்பரையில் வெள்ளி கரண்டியுடன் பிறந்ததைத் தவிர இந்த ஜென்மத்தில் வேறு எதையும் பி டி ஆர் செய்யவில்லை.  அவர் அரசியலுக்கும்  மாநிலத்திற்கும் சாபக்கேடு.  இல்லாத ஒன்றை இட்டுக்கட்டும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அளவிற்கு தரம் தாழ விரும்பவில்லை.  தனது செருப்புககு கூட பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நிகர் இல்லை என்று கடுமையான விமர்சனத்தை முன் வைத்தார்.


 இதற்கு பதிலடி கொடுத்துள்ள நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்,  இத்தகைய கீழ்த்தரமான அண்ணாமலையும் , மனநலம் குறித்து உயர் நீதிமன்றத்தால் கேள்வி எழுப்பப்பட்ட மற்றொரு நபரும் தான் தமிழ் சமூகத்தின் மீதான சாபக்கேடு. ஆனால் இந்த சாபம் பாஜகவின் மீது தான் என்றும் பதிவிட்டுள்ளார்.