“ஆட்சி, அதிகாரத்தில் பெண்களுக்கு சம உரிமை வழங்கும் ஒரே கட்சி திமுக”

 
minister nasar

நாட்டிலேயே பெண்களுக்கு சம உரிமை வழங்கும் ஒரே கட்சி திமுக தான் என்று அமைச்சர் சா.மு.நாசர் பெருமிதம் தெரிவித்துள்ளார். 

dmk minister nasar affected by covid 19 | Indian Express Tamil

திருவள்ளூர் மத்திய மாவட்டம் சார்பில் திமுக மகளிர் தொண்டரணி, ஒன்றிய, மாநகர, நகர, பேரூர் பொறுப்புகளுக்கான நேர்காணல் பூவிருந்தவல்லி அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. தி.மு.க. மகளிர் அணி செயலாளர் ஹெலன் டேவிட்சன் தலைமையில் நடைபெற்ற இந்த நேர்காணலில். அமைச்சர் சா.மு.நாசர் கலந்துகொண்டார். 

நேர்காணலுக்கு முன்னதாக மேடையில் பேசிய அமைச்சர் நாசர், “திமுகவில் பல அணிகள் இருந்தாலும், இளைஞர் அணி, தொழிலாளர் அணிக்கும் பிறகு மிகவும் பலம் வாய்ந்த அணி மகளிர் அணி தான். நாட்டில் வேறு எந்த கட்சியிலும் வழங்கப்படாக முக்கியத்தும் திமுகவில் பெண்களுக்கு வழங்கப்படுகிறது. ஆட்சியிலும் சரி, அதிகாரத்திலும் சரி பெண்களுக்கு சமஉரிமை வழங்கப்படுகிறது. மகளிர் அணியில் பொறுப்பாளர்களாக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் திமுக அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்” எனக் கூறினார். 

தொடர்ந்து நேர்காணலில் கலந்து கொள்ள வந்த மகளிர் அணியினரிடம் அமைச்சர் சா.மு.நாசர், ஹெலன் டேவிட்சன், தொண்டர் அணி அமைப்பாளர் நாமக்கல் ராணி, மாநில பிரச்சார குழு அமைப்பாளர் சேலம் சுஜாதா, திருவள்ளூர் மாவட்ட அமைப்பாளர் சங்கீதா சீனிவாசன் ஆகியோர் நேர்காணல் நடத்தினர்.