பால்குடித்து பால்குடித்து பழக்கப்பட்டவர்; அதனால் பால் நினைப்பாகவே இருக்கிறார்! ஜெயக்குமாரை விமர்சித்த அமைச்சர்

பால்வளதுறை அமைச்சர் நாசர் பால் குடிக்கும் பூனை என அண்மையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருந்தார். அதற்கு பதிலளித்த அமைச்சர், பால்குடித்து பால்குடித்து பழக்கப்பட்ட அவர் எப்பொழுதும் பால் நினைப்பாகவே இருந்துக் கொண்டு மற்றவர்களையும் அவரைப் போலவே நினைத்துகொண்டு பேசுகிறார் என இரட்டை அர்த்தத்தில் பதிலளித்தார்.
சென்னை ஆவடி பேருந்து நிலையத்தில் இருந்து திருநெல்வேலி, தூத்துக்குடிக்கு போக்குவரத்து கழகத்தின் சார்பில் இரண்டு சொகுசு பேருந்துகள் சேவையை பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நாசர், ஜெயக்குமார் பால்குடித்து பால்குடித்து பழக்கப்பட்ட அவர் எப்பொதும் பால் நினைப்பாகவே இருக்கிறார். அதனால் மற்றவர்களையும் அவரைப் போன்று நினைத்துகொண்டிருப்பதாக இரட்டை அர்த்தத்தில் பேசினார். தவறான கருத்துக்களை கூறி தன்னை முன்நிலைபடுத்திகொள்ள வேண்டும் என்று ஒரு சில அரசியல் தலைவர்கள் வதந்திகளை பரப்பி வருவதாக கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “ஆவின் பால் 430 ml உள்ளதாக கூறுகின்றனர். அதன் உண்மையான அளவு 500ml கிடையாது 517 கிராம் எடையுடன் வினியோகம் செய்வதாக தெரிவித்தார். பால் வெளியே வருவதற்கு முன் உணவு பாதுகாப்பு துறை, தர கட்டுப்பாட்டு பரிசோதனை மற்றும் ஆவின் தொழிற்சாலை பொறியாளர்கள் என மூன்று விதமான ஆய்வுகள் முடிந்துதான் வினியோகத்திற்கு வருகிறது. ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை தொடர் ஆய்வு செய்து மேற்கொள்ளப்பட்ட பிறகு ஒரு கோடி சந்தாதாரர்களை சென்றடைகிறது. ஆவின் நிர்வாகத்தில் நாளொன்றுக்கு 65 லட்சம் பாக்கெட் களை நாள் ஒன்றுக்கு பேக்கிங் செய்து அனுப்பப்படுகிறது. ஆவினில் தயாரிக்காத சத்து மாவு ஊழல் நடந்ததாக ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை அண்ணாமலை முன் வைத்தார். அண்ணாமலை நாளொரு வண்ணம் பொழுதுறு மேனியுமாக பொய் கூறுவதையே தொழிலாக வைத்துள்ளனர்.
பால் ஏற்றி வரும் வாகனங்களை சுத்தம் செய்ய RO வாட்டர் பயன்படுத்தப்படுகிறது. அதுபோன்ற 25 RO பிளான்ட்டுகள் நாளொன்றுக்கு 2 மணி நேரம் மட்டுமே வேலை செய்து வருகிறது. அந்த RO தொழிற்சாலையில் விரைவில் தயாரிக்கவுள்ள ஆவின் குடிநீர் அனைத்து பொதுமக்கள் கூடும் இடங்களிலும் ஆவின் மையம் மூலம் விரைவில் விற்பனை செய்யப்படும் என கூறினார்.