சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டிகளுக்காக முதற்கட்டமாக ரூ.5 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் மெய்யநாதன்

 
Meyyanathan

சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டிகள் செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 2ஆம் தேதி வரை சென்னையில் நடைபெற இருப்பதாகவும், இதற்காக முதற்கட்டமாக 5 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளதாகவும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்,  சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டியானது சென்னையில் நுங்கம்பாக்கம் மைதானத்தில் செப்டம்பர் 26முதல் அக்டோபர் 2ஆம் தேதி வரை நடைபெறும் என்று கூறினார். இந்தப் போட்டிக்காக மைதானத்தை பராமரிப்பதில் தொடங்கி போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்நாடு அரசு செய்து வருவதாக கூறிய அவர்,இந்த தொடரை நடத்துவதற்குமுதற்கட்டமாக 5 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளதாககவும் அவர் குறிப்பிட்டார்.

Meyyanathan


 
முதலமைச்சரின் தொடர முயற்சியால் தான் அடுத்த ஆண்டு பீச் வாலிபால் தொடர் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறிய அமைச்சர், செஸ் ஒலிம்பியாட் தொடருக்காக தமிழ்நாடு அரசு மற்றும் அகில இந்திய செஸ் கூட்டமைப்பு சங்கம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாகவும் அவர்
கூறினார். முன்னதாக, செஸ் ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்றுள்ள 12 இந்திய வீரர், வீராங்கனைகள் மற்றும் 7பயிற்சியாளர்கள் தலைமை செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.