அனைத்தும் கான்கிரீட் கால்வாய்கள்; அடுத்த ஆண்டு 100% மழைநீர் தேங்காது- அமைச்சர் மா.சு.

 
masu

வெள்ள தடுப்பு பணிகளின் முக்கிய அம்சமாக கான்கிரீட் கால்வாய்கள் அமைக்கப்பட்டு வருவதால் அடுத்த ஆண்டு 100 சதவீதம் மழைநீர் தேங்கா மாநகர் என்ற பெருமையை சென்னை அடையும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

sexual complaint minister masu instant action dharmapuri doctor

மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளான சோழங்கநல்லூர், செம்மஞ்சேரி, பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், உள்ளகரம், புழுதிவாக்கம், வேளச்சேரி ஆகிய பகுதிகளில் சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமாருடன் இணைந்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்ரமணியன், “சென்னை எல்லைக்குள் 7127 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான வெள்ள தடுப்பு பணிகள், கடந்த ஆறு மாத காலமாக திட்டமிடப்பட்டு  நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.  கொசஸ்தலை, கோவளம் ஆறுகள் தொடர்பான வெள்ளத் தடுப்பு பணிகள் நிறைவடைய 3 அல்லது நான்கு 4 ஆண்டுகள் ஆகும் என சொல்லப்பட்ட நிலையில், மாநகராட்சி சார்பில் டெண்டர் விடப்பட்டு 2 ஆண்டுகளில் பணிகள் முடிவு பெற்றுள்ளன.

சென்னையில் 48 மணி நேரத்தில் 15 சென்டிமீட்டர் மழை பொழிந்தும் கூட பெரிய அளவிலான பாதிப்பு எங்கேயும் இல்லை. 90% பாதிப்புகள் முழுமையாக சரி செய்யப்பட்டுள்ளன. ஜி.என்.செட்டி சாலை, தியாகராய சாலை, பனகல் சாலை, விருகம்பாக்கம் பகுதி, சைதாபேட்டை ஆகிய இடங்களிள் 4 சென்டி மீட்டர் மழைக்கே வெள்ளச்சேரியாக மாறும். வேளச்சேரியிலும் பாதிப்புகள் முழுமையாக சரி செய்யப்பட்டு இருக்கின்றன. சோழங்கநல்லூர் பகுதியில், ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளதால், ஆற்றோரங்களில் இருக்கக்கூடிய மக்கள் அங்கு குடியேற்றப்பட்டுள்ளனர். ஏரி, குளங்களில் நிரம்பும் உபரி நீர், குடியிருப்பு பகுதிகளில் சூழக்கூடிய நிலையில் அதனை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பத்து சென்டிமீட்டர் மழைக்கு 166 மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டு தண்ணீர் அகற்றப்பட்டது. ஆனால் தற்போது மோட்டார் வசதி இல்லாமலேயே கால்வாய் மூலமாக தண்ணீர் அப்புறப்பட்டுள்ளது. கான்கிரீட் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில்,
அடுத்த ஆண்டு 100% வெள்ள பாதிப்பு ஏற்படாத மாநகர் என்ற பெருமை, சென்னையை சேரும். வட சென்னையில் அதிக அளவு மழை பெய்த காரணத்தினால் அங்கு அதிக அளவு தண்ணீர் தேங்கியுள்ளது. வழக்கமாக மழைக்காலங்களில் சாலைகள் சேதம் அடைவது சகஜம் என்பதால், இந்த வடகிழக்கு பருவமழை முடிந்த பிறகு சேதம் அடைந்த  சாலைகள் அனைத்தும் சரி செய்யப்படும்” எனக் கூறினார்.