விலைவாசி உயர்வால் மின்கட்டணம் உயர்ந்துள்ளது- அமைச்சர் மனோ தங்கராஜ்

 
mano

மின் கட்டணம் உயர்வை பொருத்தவரை நியாயமானது, விலைவாசி உயர்வு காரணமாக மின் கட்டணம் உயர்ந்துள்ளது என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துளார். 

Junior Vikatan - 09 October 2022 - “கனிம வள கடத்தலை மத்திய அரசுதான் தடுக்க  வேண்டும்!” - சொல்கிறார் அமைச்சர் மனோ தங்கராஜ் | minister mano thangaraj  interview about Mineral smuggling

கோவை அவிநாசி சாலையில் உள்ள பி எஸ் ஜி கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் கோவை தொழில் துறை சார்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கலந்தாய்வு கூட்டத்தில் தமிழக தகவல் தொழில்நுட்ப அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் பல்வேறு தொழில்நுட்பம் சம்பந்தமான கருத்துக்களையும் புதிய தொழில்நுட்பம் புகுத்துதல், தற்பொழுது கோவை எவ்வாறு வளர்ச்சி அடைந்துள்ளது என்பது போன்ற பல்வேறு முக்கிய தகவல்களையும் எடுத்துரைத்தார்.

கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ், “கோவை மாநகரம், மிக சிறந்த வளர்ச்சியை நோக்கி செல்கின்றது என்பதை மாணவர்கள் மத்தியில் ஊக்குவிக்கும் வகையில், நிகழ்ச்சி நடந்தது. மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வளர்க்கப் வேண்டும், பொதுவாக மாணவர்கள் இத்துறையில் ஐடி, துறையில், பங்காற்ற வேண்டும், என்பதை  ஊக்க படுத்தும் வகையில் உள்ளது, தமிழகத்தை பொருத்த வரை அமைதி பூங்கா, பல்வேறு நாடுகளுக்கு நான் சென்று வந்து  உள்ளன். தமிழகத்தில் சட்ட, ஒழுங்கு சிறம்பாக உள்ளதாகவே தெரிவிக்கின்றனர். கோவையை பொருத்தவரை  அமைதியாக உள்ளது, அமைதியை சீர்குலைக்கும் விதமாக சிலிண்டர் விபத்தை நான் பார்க்கிறேன், வன்முறை, தீவிரவாதம் பொன்ற வற்றுக்கு எதிராக  தமிழக முதல்வர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றார். கோவையின் கட்டமைப்பு சிறப்பாக உள்ளது. கோவையில் நல்ல காவல்துறையினர் செயல்பாடு  சிறம்பாக உள்ளது. ஐடி துறையில், நான் முதல்வன் திட்டம் போன்றவற்றை தமிழக முதல்வர் அறிவித்து திறன் மேம்பாட்டை மேம்டுத்தி வருகின்றனர். 

ஐடி துறையை பொருத்தமட்டில் தமிழகத்தை நம்பி வரும்  அனைவரு‌க்கும் தேவையான உதவிகள் அனைத்தும் தமிழக அரசு மேம்படுத்தி வருகின்றது, ஐடி துறை நடத்து வதற்கு, முறையான, பாதுகாப்பு இருக்க வேண்டும், அவர்களுக்கான கட்டமைப்பு இருக்க வேண்டும், அதன்கான கட்டமைப்பை அரசு ஏற்படுத்தி தருவதில் முனைப்பாக உள்ளது.  மனிதவள மேம்பாடு  போன்றவற்றை பல்வேறு சிறப்பு மிக்க நடைவடிக்கை களை தமிழகத்தில் அரசு செயல்படுத்தி  உள்ளது. கடந்த ஆண்டுகளில்  10 % இருந்த இத்துறை தற்போது 20 % கூடுதலாக இயங்கி வருகின்றது. மின்கட்டணம், நியாயமான மின்கட்டணமாக உள்ளது, விலைவாசி உயர்வு காரணமாக மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அனைத்து விலைவாசிகளும் உயர்வை கண்டுள்ளது, அதனால் தொழில் துறைக்கு ஏற்ற வகையில் மின்கட்டணம் உயர்ந்துள்ளது. இதில் குறை இல்லை” என தெரிவித்தார்