அதிமுக ஆட்சிக்காலத்தில் கோ பேக் மோடி, இப்போது கம் பேக் மோடியா? அமைச்சர் விளக்கம்

 
mano

அரசு முறை பயணமாக அரசின் திட்டத்திற்காக வரும் பிரதமரிடம் நட்பான அணுகுமுறை நிச்சயம் எனவும் அவசியம் இதனால் திமுக தனது கொள்கைகளில் சமரசம் செய்ய போவதில்லை எனவே இதை ஒரு காரணமாக வைத்து விமர்சனம் செய்வது சரியல்ல என்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோதங்கராஜ் விளக்கமளித்துள்ளார்.


கன்னியாகுமரி மாவட்டத்தில் குளச்சல் நகராட்சிக்கு உட்பட்ட திடக்கழிவு மேலாண்மை திட்ட பணிகள், அரசு பயணியர் விடுதி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை பார்வையிட்ட தகவல் தொழில் நுட்பதுறை அமைச்சர் மனோதங்கராஜ் குளச்சல் அரசு மருத்துவமனையை ஆய்வு செய்தார். ஆய்வின் போது மருத்துவர் மற்றும் செவிலியர்களிடம் மருத்துவமனை செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். 

அதன்பின் அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கடந்த காலங்களில் பிரதமர் வரும் போது திமுக எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் தற்போது பாஜக வுடன் ஒரு நெருக்கம் இருப்பது போல் தோற்றமளிக்கிறது என்ற கேள்விக்கு அரசு முறை பயணமாக அரசின் திட்டத்திற்காக வரும் பிரதமரிடம் நட்பான அணுகுமுறை நிச்சயம் அவசியம் இதை வைத்து கொண்டு திமுக தனது கோரிக்கைகள் சமரசப்படுத்தியது இல்லை என்றும் நீட் விலக்கு ஜிஎஸ்டி, போன்றவைகளுக்கு மத்திய அரசுடன் போராடி வருவதாகவும் எனவே இதை காரணம் காட்டி விமர்சனம் செய்வது சரியல்ல என்றும் மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போதுள்ள கூட்டணி வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் தொடரும் என்று கூறி உள்ளதை சுட்டிக் காட்டி பதிலளித்தார்.