முல்லை பெரியார் அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னி குவிக் கல்லறைக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் மரியாதை

 
it minister

தமிழ் தொழில்முனைவோர் மற்றும் திறனாளிகள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக லண்டன் சென்றுள்ள தமிழக தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் லண்டன் கேம்பர்லி நகரில், முல்லை பெரியார் அணையினை கட்டிய கர்னல் ஜான் பென்னி குவிக் கல்லறைக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

it

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: லண்டனில் நடந்த தமிழ் தொழில்முனைவோர் மற்றும் திறனாளிகள் மாநாட்டில் கலந்து கொண்ட மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் திரு. மனோ தங்கராஜ் அவர்கள் லண்டன் கேம்பர்லி நகரில் முல்லை பெரியார் அணையினை கட்டிய கர்னல் ஜான் பென்னி குவிக் கல்லறை அமைந்துள்ள தேவாலய நிர்வாகத்தின் அழைப்பை ஏற்று, எல்காட் நிர்வாக இயக்குநர் திரு. அஜய் யாதவ் இ.ஆ.ப. மற்றும் லண்டன் திமுக அயலக அணி அமைப்பாளர் திரு. பைசல், திரு.சந்தன பீர் ஒலி ஆகியோருடன் தேவாலயம் சென்று கர்னல் ஜான் பென்னி குவிக் கல்லறைக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் லண்டன் ரெக்ரியேஷன் பார்க்கில் தமிழக அரசு சார்பாக கர்னல் ஜான் பென்னி குவிக சிலை நிறுவப்பட உள்ள இடத்திற்கு சென்று பார்வையிட்டார். ஜான் பென்னி குவிக் சிலை வைப்பது தொடர்பாகவும் நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வாழ்த்துகளை அவர்களுக்கு தெரிவித்து கொண்டார். உடன் லண்டன் திமுக அயலக அணி நிர்வாகிகள்,  சத்யா,  செந்தில் குமார்,  பிரேம் ஆகியோர் இருந்தனர்.