பொன்.ராதாகிருஷ்ணனுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் சவால்!

 
mano

குமரி மாவட்டத்தில் கனிமவளம் குறித்து  என்னுடன்விவாதிக்க தயாரா? என்று பொன்னாருக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் சவால் விடுத்துள்ளார்.

tn

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட  தமிழக தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அதிமுக, பாஜக ஆட்சிக் காலத்தில் 39 குவாரிகள் செயல்பட்டு வந்தன. தற்போது திமுக ஆட்சிக்கு வந்த பின் 6 குவாரிகள் மட்டுமே செயல்பட்டு வருகிறது. விதிகளுக்கு புறம்பாக எந்த குவாரிகளும் செயல்படவில்லை. சென்ற ஆட்சியை போன்று குமரியில் விதிகளுக்கு புறம்பாக எந்த குவாரிக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. குவாரிகளில் இருந்து வெளி மாநிலத்திற்கு கற்கள் கொண்டு செல்ல அனுமதி சீட்டு வழங்கப்படவில்லை.  இந்த உண்மைகளை ஏன் பொன்.ராதாகிருஷ்ணன் அவர்கள் பேச மறுக்கிறார்? கடந்த ஆட்சியில் 39 குவாரிகளுக்கும் அனுமதி வழங்க வேண்டும் என்று ஒரே அணியில் இருந்தவர்கள் தான் அதிமுக மற்றும் பாஜகவினர் என்பதை மக்கள் நன்கு அறிவர்.

pon radha

குமரி மாவட்டத்தில் கனிமவளம் குறித்து பொன்.ராதாகிருஷ்ணன் பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார்; ஒரே மேடையில் செய்தியாளர்கள் முன்னிலையில் என்னுடன் அவர் விவாதிக்க தயாரா?"என்றார்.தொடர்ந்து பேசிய அவர் , மியான்மர் நாட்டில் சிக்கியுள்ள 300 இளைஞர்களை மீட்க அரசு போதிய  நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது . அத்துடன் ஆன்லைன் மூலம் நடைபெறும் போலி வேலை வாய்ப்பு முகாம்களை முடக்கவும் ,கட்டுப்படுத்தவும் அரச மூலம் போதிய  நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசால் காலதாமதம் ஆகும் அயலக வாழ் மக்கள் பிரச்சனைகளை அயலக வாழ் தமிழர்கள் மூலம் ஒருங்கிணைத்து  முதல்வர் சரி செய்து வருகிறார் என்று கூறினார்.