சாலை விபத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3% குறைந்துள்ளது- அமைச்சர் மா.சு.

 
masu

சாலை விபத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கடந்த 2019 விட 2022 ஆம் ஆண்டு மூன்று சதவீதம் குறைந்துள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

ma

மாவட்ட அளவிலான சுகாதார உயர் அதிகாரிகளுக்கான கருத்தரங்கம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தலைமையில் சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், “தொற்றா நோய்களின் பாதிப்புகளை தடுப்பதற்கும், குறைப்பதற்காகவும் கடத்த ஆண்டு மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டம் தொடங்கப்பட்டு அந்த திட்டம் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தற்போது அந்த திட்டத்தின் மூலம் 1 கோடி பயனாளிகள் 615 கோடியே 68 லட்சம் ரூபாய் செலவில் சிகிச்சை பெற்று இருக்கிறார்கள்.
 
இன்னுயிர் காப்போம் -  நம்மை காக்கும் 48 திட்டத்தின் மூலம் 23 கோடியே 87 லட்சம் ரூபாய் செலவில், 1.38 லட்சம் பேர் சிகிச்சை பெற்று இருக்கிறார்கள். கடந்த 2019 ஆம் ஆண்டு 57,877 பேருக்கு சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. அதே போல 2022 ஆம் ஆண்டு 58,679 பேர் சாலை விபத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள். இதன் மூலம் 2019-ஆம் ஆண்டிற்கும் 2022-ஆம் ஆண்டிற்கும் சாலை விபத்து ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 1.4% அதிகரித்துள்ளது. அதேபோல, 2019 ஆம் ஆண்டு சாலை விபத்தால் 16,736 உயிரிழந்துள்ளனர். அதுவே, 2022  ஆம் ஆண்டு 16,232 உயிரிழந்துள்ளனர். சாலை விபத்தால் 504 (3%) உயிரிழப்புகள் கடந்த 2019 ஆம் ஆண்டு விட 2022 ஆம் அண்டு குறைந்துள்ளது” எனக் கூறினார்.