தமிழ்நாட்டுக்கு குரங்கம்மை வரவே வராது என்று கூறவில்லை- அமைச்சர் மா.சு.

 
masu

குரங்கு அம்மை வரவே வராது என்று கூறவில்லை ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய மாவட்டங்களில் படுக்கை வசதிகளும் பன்னாட்டு விமான நிலையங்களில் பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Exemption from fines only not from the mask Minister Ma Subramanian |  அபராதத்திலிருந்துதான் விலக்கு முகக்கவசத்திலிருந்து இல்லை அமைச்சர் மா  சுப்பிரமணியன் | News in Tamil

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் ரோட்டரி கிளப் சார்பில் மகளிருக்கான ஆரம்ப நிலை புற்றுநோய் கண்டறியும் சிறப்பு முகாமை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், “முதலமைச்சர் பதவியேற்ற பின் புற்றுநோய்க்காக சிறப்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஓராண்டில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் திறக்கப்பட உள்ளது. மேலும் தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை, அவ்வாறு இருந்தால் கட்டாயம் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும். அதுமட்டுமின்றி குரங்கு அம்மை வரவே வராது என்று கூறவில்லை. 77 நாடுகளில் குரங்கு அம்மை பாதிப்பு என்பது உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது

அதேபோல் இந்த 4 மாவட்டங்களில் இதற்கென படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று கூறினார். அதுமட்டுமின்றி பன்னாட்டு விமான நிலையங்களில் பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது” என தெரிவித்தார்.