மாரடைப்பால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க தினமும் இதை செய்திடுக- அமைச்சர் மா.சு.

 
ma Subramanian

கொரோனாவிற்கு பிறகு 35 வயது 40 வயது என இளம் வயதுலேயே மாரடைப்பு வந்து உயிரிழப்பு ஏற்படுவதை  தடுத்திட  தினமும் ஒரு மணிநேரம் ஒடுவதும் நடப்பதும் தான் ஆயுதம் என மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். 

ma


தஞ்சையில் பிறவியிலேயே  உதடு அன்னப்பிளவு ஏற்பட்டு அதனால் பேசமுடியாமல் பாதிக்கப்பட்ட ஆயிரம் குழந்தைகளுக்கு இலவசமாக பிளாஸ்டிக் அறுவை  சிகிச்சை அளித்த தஞ்சை மீனாட்சி மருத்துவமனை நிர்வாகத்தை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சான்றிதழ் வழங்கி பாராட்டியவர். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழ்நாட்டில்  கிராமபுறங்களிலும், மக்கள் அதிக அளவில் வசிக்கும் பகுதிகளிலும் சிறிய அளவிலான 708 மருத்துவமனைகள் கட்டப்பட்டு வருகின்றன. அடுத்தமாதம் புதிய 708 மருத்துவமனைகளும் திறக்கப்படும். 

கொரோனாவிற்கு பிறகு 35 வயது 40 வயது உடையவர்களுக்கு கூட  மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவதை தடுத்திட  நாள் ஒன்றுக்கு ஒரு மணிநேரமாவது ஓடவும், நடைபயிற்சியில் ஈடுபட வேண்டும், அது தான் தற்காப்பு ஆயுதம். தற்போது தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு இல்லை. 
புதிய வகை கொரோனாவை  தடுத்திட வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்து பயணிகளும் கண்காணிக்கப்படுகிறார்கள். அனைவரும் மாஸ்க் அணிவது கட்டாயம் என்ற விதி இன்னும் இருக்கிறது.  மாஸ்க் அணிவது நல்லது. இரத்தத்தை எடுத்து காதலை தெரிவிக்க  ஓவியம் வரைவது எழுதுவது தடை செய்யப்பட்டுள்ளது. எங்காவது யாராவது  புனிதமான  இரத்தத்தை தவறாக பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்