தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு என பொய் தகவல் பரப்பப்படுகிறது - மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு நிலவி வருவதாக தவறான தகவல் பரப்பப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அத்தியாவசிய மருந்துகள் இருப்பு உள்ளது என விளக்கம் அளித்துள்ளார்.
சென்னையில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் மருந்து தட்டுபாடு என ஒரு சில அதிகாரிகள் தவறான தகவலை அளித்துள்ளனர். அத்தியாவசிய மருந்துகள் இருப்பு உள்ளது.
தமிழகத்தில் 327 அத்தியாவசிய மருத்துகள் 3 மாதங்களுக்கு இருப்பு உள்ளது. 3 மாதங்களுக்கு தேவையான மருந்துகள் சேமிப்பில் வைக்கப்பட்டுள்ளது. சிறப்பு மருந்துகள் தேவைக்கேற்ப கொள்முதல் செய்யப்படுகிறது.உக்ரைன் போர் உள்ளிட்டவற்றால் சில மருந்துகளுக்கு தட்டுபாடு உள்ளது. மாவட்டம் தோறும் மருந்து கிடங்கு என மாநிலம் முழுவதும் மருந்து கிடங்குகள் அமைக்கப்படும். இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.