15 கிமீ தூரம் நடந்தே சென்று அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்தார் அமைச்சர் மா.சு.

 
tn

எட்டயபுரத்திற்கு 15கிமீ தூரம் நடந்தே சென்று அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

ma subramanian

 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல்லையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் கோவில்பட்டியில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் புதிதாக ரூ‌.10.5 கோடி மதிப்பீட்டிலான மகப்பேறு பிரிவு கட்டிடத்தை திறந்து வைத்தார். 

tn

இதற்காக நேற்று மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கோவில்பட்டிக்கு நேற்று வருகை புரிந்திருந்த நிலையில் இன்று  கோவில்பட்டி அருகே உள்ள திட்டங்குளம் பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டார். இந்நிலையில் கோவில்பட்டியில் இருந்து எட்டயபுரத்திற்கு 15கிமீ தூரம் நடந்தே சென்று அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்தார்  அமைச்சர் மா.சுப்பிரமணியன். ஆய்வின்போது சில பணியிடங்களில் பணியாளர்கள் இல்லாமல் இருப்பது குறித்து  அறிந்து கொண்ட அவர் , விரைவில் பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று உறுதியளித்து,  மருத்துவமனை வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டார்.