இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக்காக பாடுபடுவோம் - அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

 
nehru

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற பாடுபடுவோம் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். 

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகிற பிப்ரவரி மாதம் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வருகிற 31ம் தேதி தொடங்குகிறது.  இதையொட்டி அனைத்து கட்சிகளும் தேர்தலை சந்திக்க சுறுசுறுப்பாகி வருகிறது. தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியே இந்த தேர்தலில் போட்டியிடும் என திமுக அறிவித்துள்ளது. அதிமுகவை பொறுத்தவரையில், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இரு தரப்பும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது. 

இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்கு சேகரிக்கும் பணியை திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் தொடங்கியுள்ளன. இந்நிலையில், வாக்கு சேகரிப்பதற்காக அமைச்சர் கே.என்.நேரு இன்று காலை ஈரோட்டிற்கு வருகை தந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த 18 மாதங்களில் நாங்கள் செய்த சாதனைகளின் அடிப்படையில்தான் நாங்கள் வாக்கு கேட்கிறோம். இந்த தொகுதியை காங்கிரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒதுக்கியுள்ளார். அக்கட்சியின் வெற்றிக்காக பாடுபட உள்ளோம். கடந்த 18 மாதங்களில் எங்களின் சாதனைகளின் அடிப்படையில் நாங்கள் வாக்குகளை கோருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.