தமிழகத்தில் 3 இடங்களில் குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் - அமைச்சர் கே.என்.நேரு பேச்சு

 
nehru

தமிழ்நாட்டில் உள்ள 3 குப்பை கிடங்குகளில் மறுசுழற்சி முறையில் மின்சாரம் தயாரிக்கப்படும் திட்டம் செயல்படுத்தபடவுள்ளதாக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். 

சென்னை பெருங்குடி குப்பைமேடு தீ விபத்து தொடர்பாக அரசியல் கட்சியினர் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தனர். அப்போது, அதிமுக, பாமக,காங்கிரஸ்,விசிக, தமிழக வாழ்வுரிமை கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் தீர்மானத்தில் பேசினர். அப்போது, தீயை கட்டுக்குள்  கொண்டுவரவேண்டும் என்றும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மறு சுழற்சி முறையை கையாளவேண்டும் என்றும் வலியுறுத்தினா்.

KN Nehru

இதற்கு பதில் அளித்து பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,  பெருங்குடி குப்பை கிடங்கு 225 ஏக்கர் பரப்பளப்பில் உள்ளது என்றும் 25 ஆண்டுகளாக இங்கு குப்பை சேகரிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். பல்வேறு மண்டலங்களில் இருந்து குப்பைகள் கொட்டப்படுவதாகவும், இங்கு கொட்டப்பட்டு இருந்த தென்னை நார் கழிவில் வெயிலால் மீத்தேன் வாயு உற்பத்தியாகி தானாகவே  தீ பற்றி விபத்து ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு கூறினார். பெருங்குடி தீ விபத்தில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், நாளைக்குள் பணிகள் முழுமையாக முடிக்கப்படும் என்றார்.  தமிழகத்தில் மூன்று இடங்களில் மக்காத குப்பை வைத்து மின்சாரம், மீத்தேன் எரிவாயு  தயாரிக்கும் திட்டம் விரைவில் செயல்பட உள்ளதாகவும் அமைச்சர் நேரு  தெரிவித்தார்.