தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பாதாள சாக்கடை திட்டம் - அமைச்சர் கே.என்.நேரு

 
KN Nehru

 

மாநிலம் முழுவதும் பரவலாக அனைத்து மாநகராட்சிகளிலும், நகராட்சிகளிலும், புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளிலும் பாதாள சாக்கடைத் திட்டம் நிச்சயம் செயல்படுத்தப்படும் என அமைச்சர் கே.என் நேரு தெரிவித்துள்ளார் .

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் பாதாள சாக்கடை செயல்படுத்துவது தொடர்பாக கேள்வி எழுப்பினர். மேலும், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை. முத்துராஜா, புதுக்கோட்டை நகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளுக்கு பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்து அரசு நடவடிக்கை எடுக்குமாக என்று கேள்வி எழுப்பினார். 

nehru

இதற்கு பதில் அளித்த நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, புதுக்கோட்டை நகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளுக்கு 103 கிலோ மீட்டர் தொலைவுக்கு, பாதாள சாக்கடைத் திட்டம் ரூ.131.90 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளதாகவும், இதற்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், இற்கான விரைவில் பணிகள் தொடங்குவது தொடர்பாக முதலமைச்சருடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதோடு, புதுக்கோட்டை நகரம் முழுவதும் பாதாள சாக்கடைத் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்றும் உறுதியளித்தார். மேலும், மாநிலம் முழுவதும் பரவலாக அனைத்து மாநகராட்சிகளிலும், நகராட்சிகளிலும், புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளிலும் பாதாள சாக்கடைத் திட்டம் நிச்சயம் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.