அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று!!

 
KKSSR

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று  இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

corona


தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில்  2,093 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதனால், இதுவரை தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 லட்சத்து 26ஆயிரத்து 351 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் கொரோனாவுக்கு பலியாக இதுவரை  கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 38,031 ஆக உள்ளது. தமிழகம் முழுவதும் 16,504 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இப்படியாக கொரோனா தொற்றால்  பொதுமக்களும், பொதுவாழ்க்கையில் ஈடுபட்டு வரும் அரசியல் தலைவர்களும் அடுத்தடுத்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
 

corona

இந்நிலையில் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதியான நிலையில் அமைச்சர் தன்னை தனிமைப் படுத்திக்கொண்டார். 
ஏற்கனவே தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்,  முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்துள்ளனர் . அதேபோல் பால்வளத்துறை அமைச்சர் நாசர் கடந்த வாரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.